News January 17, 2026
நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்து PHOTOS

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம்.
Similar News
News January 31, 2026
எங்கு மரியாதை கிடைக்கிறதோ அங்குதான் கூட்டணி: பிரேமலதா

தமிழகத்தில் அத்தனை கட்சிகளும் தங்களுக்கு தோழமை கட்சிகள்தான். பேசுவது, பழகுவது வேறு, கூட்டணியில் சேர்வது வேறு என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், இது தங்கள் கட்சி, எப்போ முடிவு எடுக்க வேண்டுமோ அப்போது அறிவிப்போம். யாருடைய அவசரத்துக்கும் சொல்ல முடியாது என்றும், தங்களுக்கு எங்கு உரிய மரியாதை, எங்கு உரிய நியாயம் கிடைக்கிறதோ, அங்கு தான் கூட்டணி எனவும் தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
30 லட்சம்+ எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியானது!

பாலியல் குற்றவாளியான <<18548710>>எப்ஸ்டீன் தொடர்பான<<>> 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை US நீதித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 2,000 வீடியோக்களும், 18 லட்சம் புகைப்படங்களும் அடங்கும். எப்ஸ்டீனின் சொத்துக்கள் & அவர் பிரபலங்களுக்கு அனுப்பிய இமெயில் தொடர்பான தகவல்கள் இதில் உள்ளதாகவும், இந்த வழக்கில் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால், வெளிப்படைத்தன்மைக்காக இந்த ஆவணங்கள் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
ஜனவரி 31: வரலாற்றில் இன்று

*1805- இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டார். *1971- அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை படைத்தனர். *1987- சென்னை மாகாணத்தின் முன்னாள் CM மீஞ்சூர் பக்தவத்சலம் நினைவு தினம். *1923 – இந்திய ராணுவத்தின் முதல் பரம்வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா பிறந்த தினம்.


