News January 17, 2026
அதிமுகவின் தேர்தல் அறிக்கை திமுகவின் டூப்: TRB ராஜா

அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை அமைச்சர் TRB ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு டூப் போட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுக பரிதாபமாகிவிட்டதாக அவர் சாடியுள்ளார். 2021-ல் திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என கூறிய EPS, இப்போது அதே திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை .. கலெக்டர் அறிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7-ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
நெருங்கும் தேர்தல்: சுழலும் அரசியல் கட்சிகள்!

*தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் திமுகவின் குழுவினர் இன்று டெல்டா மாவட்டங்களில் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். *சென்னை பனையூரில் பாமக தலைவர் அன்புமணி, வேட்பாளர் நேர்காணலை தொடங்கினார். *இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் வேட்டவலம் K மணிகண்டன் NDA-வுக்கு ஆதரவு தெரிவித்தார். *கூட்டணி தொடர்பாக சென்னையில் OPS தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
News January 27, 2026
நாளை முதல் தவெக தேர்தல் பிரசாரம்: விஜய்

‘ஜன நாயகன்’ பட பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், 2026 தேர்தலுக்கான அறிவிப்புகளை விஜய் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஏற்கனெவே அறிவித்தபடி நாளை முதல் தவெக தேர்தல் பிரசாரம் திட்டமிட்டப்படி தொடங்கும் என்று விஜய் அறிவித்துள்ளார். சென்னை YMCA மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கும் பிரசார கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


