News January 17, 2026
முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை : மூர்த்தி

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை தரப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். ஏற்கெனவே அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேறாதபோது, CM-ன் இந்த அறிவிப்பு எப்படி சாத்தியம்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் பேசிய மூர்த்தி, CM உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும், முக்கிய துறைகளில் வீரர்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
CINEMA 360°: ஹீரோயினான குஷ்பு மகள்!

மலையாளத்தில் உருவாகும் ‘ஆரம்பம்’ என்ற படத்தின் மூலம் சுந்தர்.சி – குஷ்பூவின் மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் *SK 26 கடவுள் முருகரை பற்றிய கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது * அஜித் – ஆதிக் ரவிச்சந்திரனின் படத்தின் அப்டேட் வரும் 22-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது * பிரதீப் ரங்கநாதனின் LIK படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 16, 2026
மொபைல் ஸ்பீக்கரில் தண்ணீர் போய்டுச்சா?

கூகுளில் Mobile Speaker Water Ejector என தேடி, Fix My Speakers என்ற டேப்-ஐ ஓப்பன் செய்யுங்கள். அதில் Blower-ஐ கிளிக் செய்தால் சவுண்ட் கேட்கும். அந்த சத்தம் அடங்கும் வரை காத்திருந்தால், உங்கள் மொபைல் ஸ்பீக்கர் சரியாகிவிடும். 5 நிமிடங்களை கடந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால், வெளியில் வந்துவிட்டு சவுண்ட் செக் செய்யுங்கள். இந்த சவுண்டானது நீரை வெளியேற்றத் தேவையான அழுத்தத்தில் இருக்கும்.
News February 16, 2026
மருமகளுக்கு எதிராக மகளை களமிறக்க ராமதாஸ் திட்டம்!

அன்புமணி களமிறக்கும் வேட்பாளர்களை எதிர்த்து தனது வேட்பாளர்களை களமிறக்க ஏற்கெனவே ராமதாஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் சௌமியா அன்புமணி தருமபுரி (அ) பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிடவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், போட்டியிடும் தொகுதியை சௌமியா அறிவித்த பிறகு அதே தொகுதியில் தனது மகளான ஸ்ரீகாந்தியை களமிறக்க ராமதாஸ் ஆலோசனை நடந்தி வருவதாக கூறப்படுகிறது.


