News January 17, 2026

வங்கதேசத்திடம் தடுமாறும் இந்திய அணி

image

U19 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 71/3 ரன்களில் தடுமாறி வருகிறது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே(6) , வேதாந்த் திரிவேதி(0), விஹான் மல்கோத்ரா(7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். ஆனால் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்து வருகிறார்.

Similar News

News February 5, 2026

தர்ணாவில் ஈடுபடுவேன்: ராஜமெளலி

image

தான் இயக்கும் ‘வாரணாசி’, 3 மணிநேரம் ஓடக்கூடிய ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமெளலி தெரிவித்துள்ளார். படம் வெளியாவதற்குள் இந்தியாவில் போதிய IMAX திரைகள் வந்துவிடுமா என்ற கேள்விக்கு, நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட இடத்தின் முன்பு தர்ணா செய்வது வழக்கம். அதன்படி இந்தியாவில் நிறைய IMAX திரைகள் உருவாக்க சொல்லி US-ல் உள்ள IMAX அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றார்.

News February 5, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 602
▶குறள்:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
▶பொருள்: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

News February 5, 2026

ஹிந்தி திணிப்பு கிருமியை கட்டுப்படுத்தணும்: கனிமொழி

image

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழ் எழுத்துக்களை மாற்றி ஹிந்தியை இடம்பெறச் செய்தது சர்ச்சையாகியுள்ளது. தனது X பதிவில் கனிமொழி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும், நோய்த்தொற்றை போல ஊரெங்கும் பரவிடும் ஹிந்தி திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!