News January 17, 2026

ராணிப்பேட்டை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

ராணிப்பேட்டை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 25, 2026

ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!

image

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இணையதளத்தில் சிறப்பு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், “வருங்காலத்திற்காக வாக்கு, நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்கு மற்றும் இந்தியாவை மேம்படுத்த வாக்கு” என்ற முழக்கங்களுடன் இந்த விழிப்புணர்வு பதிவு அமைந்துள்ளது.

News January 25, 2026

ராணிப்பேட்டை: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

ராணிப்பேட்டை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை எரிவாயு உருளை நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், சிலிண்டர் விநியோக சேவை குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, நுகர்வோர் தங்களது புகார்களைத் தெரிவித்து இப்பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!