News January 17, 2026

அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் (PHOTOS)

image

சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 முக்கிய வாக்குறுதிகளை EPS அறிவித்துள்ளார். *ரேஷன் அட்டை உள்ள அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ₹2,000 உதவித்தொகை. *ஆண்களுக்கும், மகளிரைப் போலவே டவுன் பஸ்களில் இலவச பயணம். *அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் கிராமங்கள், நகரங்களில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு. *100 நாள்கள் வேலைத் திட்டம் 150 நாள்களாக மாற்றப்படும். *5 லட்சம் மகளிருக்கு ₹25,000 மானியத்தில் ஸ்கூட்டர்.

Similar News

News January 27, 2026

BUDGET: இந்த பொருள்களின் விலை குறைகிறது

image

மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் மின்சார வாகனங்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கான இறக்குமதி வரி மற்றும் மானியம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த பொருள்களின் விலை ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

News January 27, 2026

வேலைக்காக படுக்கைக்கு அழைப்பு: சின்மயி பகீர் புகார்

image

திரைத்துறையில் வாய்ப்புக்காக பெண்களிடம் ‘பாலியல் உறவை’ எதிர்பார்க்கும் சூழல் இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்திருந்தார். இதை மறுத்துள்ள சின்மயி, இத்துறை கண்ணாடி அல்ல, சம்மதிக்க மறுத்தால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக பதிவிட்டுள்ளார். மேலும், சிரஞ்சீவியின் காலத்தில் பெண் கலைஞர்கள் மதிக்கப்பட்டார்கள், ஆனால் தற்போது கமிட்மென்ட் என்ற பெயரில் வேலைக்கு பாலியல் உறவை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

News January 27, 2026

வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது அல்ல: எலான் மஸ்க்

image

உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜை ரகசியமாக யாராவது படித்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது உண்மை தான் என்கிறார் எலான் மஸ்க். வாஸ்ட்ஆப் உரையாடல்களை மெட்டா நிறுவனம் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மெட்டா, என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் மெசேஜ்கள் பாதுகாப்பானவை என வாதிட்டது. இதுபற்றி கமெண்ட் செய்த மஸ்க், வாட்ஸ்ஆப் பாதுகாப்பற்றது என்று கூறியுள்ளது, அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!