News January 17, 2026
அண்ணாமலைக்கு புதிய பதவியா?

பாஜகவில் நயினாரும், அண்ணாமலையும் எதிரும் புதிருமாக இருந்து வந்தது டெல்லி தலைமையை அப்செட் செய்திருந்தது. இதனால், அவர்களை அழைத்து மத்தியஸ்தம் செய்திருக்கிறது டெல்லி பாஜக. இதனால் அண்ணாமலையும் சற்றே அனுசரித்து போக, அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாம். அத்துடன் தேர்தல் களத்தில் பிரசார பீரங்கியாகவும் அண்ணாமலையை பயன்படுத்த பாஜக தரப்பில் திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News February 6, 2026
புளுகு மூட்டை திமுக: EPS

களத்திற்கு வந்து ஸ்டாலின் ஓட்டு கேட்டால் அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல, வெறும் 0 தான் என EPS கூறியுள்ளார். மத்திய அரசு போதிய நிதியை வழங்கவில்லை என மக்களுக்கு திமுக அல்வா கொடுக்கிறது என்ற அவர், ரயில்வே திட்டங்கள் வரவில்லை என புளுகு மூட்டைகளை அரசு அவிழ்த்து விடுவதாகவும் பேசியுள்ளார். மேலும், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவம், மரியாதையை CM எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
ஹீமோகுளோபின் அதிகரிக்க இத குடிங்க போதும்!

ஹீமோகுளோபின் ரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால், ரத்த சோகை பிரச்னை ஏற்படலாம். ஆதலால், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, டாக்டர்கள் சில எளிய ஜூஸ்களை பரிந்துரைக்கின்றனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள். உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
BREAKING: வேல்முருகன் விலக திட்டம்.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

திமுக கூட்டணியிலிருந்து தவாக விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற CM ஸ்டாலினின் நிகழ்ச்சியில் வேல்முருகன் ஆப்சென்ட் ஆனார். அண்மைக் காலமாக கூட்டணி நிலைப்பாட்டில் தனது கருத்தை மாற்றிய வேல்முருகன், கடந்த 3 நாள்களாக மா.செ.,க்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், பெரும்பாலானோர் திமுக கூட்டணியை விரும்பவில்லையாம். இதனிடையே, <<19063026>>தவாகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக<<>> அணுகுகிறது.


