News January 17, 2026

ராம்நாடு: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

image

ராம்நாடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

Similar News

News February 14, 2026

இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.

1.ராமநாதபுரம்- 9445000363

2.ராமேஸ்வரம்- 9445000364

3.திருவாடானை- 9445000365

4.பரமக்குடி- 9445000366

5.முதுகுளத்தூர்- 9445000367

6.கடலாடி- 9445000368

7.கமுதி- 9445000369

*அலுவலக நேரத்தில் மட்டும் அழைக்கவும்* இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News February 14, 2026

இராமநாதபுரம்: கொலை குற்றவாளிகள் சரண்!

image

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா(31). இவரை 2025 மே.17ம் தேதியன்று சிலர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 பேர் கைதான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.சி.ஐ.டி,க்கு மாற்றியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரில் இருவர் சரணடைந்தனர். மேலும் இருவர் நேற்று சரணடைந்தனர்.

News February 14, 2026

இராம்நாடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

image

திம்மநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வ பெருமாள் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞர் செல்வபெருமாளுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நேற்று நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.

error: Content is protected !!