News January 17, 2026
Gmail-ல் தப்பா Mail அனுப்பிட்டீங்களா? இதோ தீர்வு

Gmail-ல் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்யமுடியும். இதற்கு, ➤Desktop-ல் உள்ள Gmail-ஐ Login பண்ணிக்கோங்க ➤Settings ஆப்ஷனுக்கு சென்று, General Settings-ஐ க்ளிக் செய்யவும் ➤அதில் ‘Undo Send’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதில் 30 Seconds என டைம் செட் பண்ணிக்கோங்க. இவ்வாறு செய்தால், நீங்கள் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்ய உங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். பலருக்கும் பயனளிக்கும், SHARE THIS.
Similar News
News January 30, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹32,000 சம்பளம்!

தேசிய விவசாய & கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 Development Assistant காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 21- 35 வரை *கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤தேர்ச்சி முறை: முதல்நிலை, முதன்மை & மொழித் திறன் தேர்வுகள் நடைபெறும் ➤சம்பளம்: ₹32,000 வரை ➤பிப்ரவரி 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News January 30, 2026
அகிம்சை அமைதியான நாள் இன்று!

ஜனவரி 30, 1948, இந்தியா அகிம்சை ஒளியை இழந்த நாள். உடம்பில் குண்டு பாய, ‘ஹேராம்’ என்ற முழக்கத்துடன், மகாத்மா காந்தி தனது இன்னுயிரை துறந்த நாள் இன்று. உலகிற்கு அகிம்சையின் சக்தியை எடுத்துரைத்த அவரின் நினைவுநாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடவுளுக்கு மதம் இல்லை என்றும் உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும் போன்ற அவரின் வார்த்தைகள் இன்றும் உலகை வழிநடத்தி வருகின்றன.
News January 30, 2026
PT உஷாவின் கணவர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

இந்திய கபடி Ex வீரரும், PT உஷாவின் கணவருமான சீனிவாசன்(64) மரணமடைந்துள்ளார். CISF இன்ஸ்பெக்டரான அவர், நேற்று இரவு கேரளாவின் திக்கோடி உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விஷயமறிந்த PT உஷா டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார். அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


