News January 17, 2026
ஆட்சியில் பங்கு கேட்டாரா ராகுல் காந்தி?

நீலகிரிக்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்., கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மீட்டிங் நடத்தியிருந்தார். இதில் நிர்வாகிகள் தரப்பில் ஆட்சியில் பங்கும், 3 அமைச்சர்கள் பதவியும், அதிக தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்ற் கோரிக்கைகள் வலுத்ததாம். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவிக்கவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ராகுலும் அதே முடிவில்தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News February 7, 2026
Official: ஹர்ஷித்துக்கு பதிலாக சிராஜ்

WC பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்த <<19068252>>ஹர்ஷித் ராணா<<>> WC தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக BCCI அறிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட அணி: சூர்யகுமார் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சாம்சன், இஷான், திலக், பாண்ட்யா, துபே, அக்சர் படேல், ரிங்கு சிங், பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், சிராஜ்.
News February 6, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வியாழக்கிழமை பாட அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பள்ளிகளுக்கு வேலைநாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. <<19068555>>புதுக்கோட்டை, திருவாரூர்<<>> ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 6, 2026
BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்தார்

<<19067093>>மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தை<<>> தொடர்ந்து, கொங்குநாடு முன்னேற்ற கழகமும் (கொமுக) அதிமுக கூட்டணியுடன் இணைந்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தங்கவேலு, கட்சி நிர்வாகிகளுடன் சேலத்தில் EPS-ஐ நேரில் சந்தித்தார். அப்போது, கொமுக நிர்வாகிகளை பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்றார். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவை அளிப்பதாக EPS-யிடம் அவர் கடிதத்தை வழங்கினார்.


