News January 17, 2026

திருவள்ளூர்: 10ஆவது படித்தால் ரூ.46,000 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.46,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க பிப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 31, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

மப்பேடு எறையாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவர் நேற்று முன் தினம் திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே தனது மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த 3 பேர் விஜயகுமாரிடம் வழி கேடுள்ளனர். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அவரைத் தாக்கினர். இந்நிலையில், ராஜேஷ்(19), சங்கர்(22), சந்துரு(20) ஆகியோரை திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

News January 31, 2026

ஆவடியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கால்நடைத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணையினை பெற்று கொடுத்து ரூ.14,49,000/- பண மோசடி செய்த வழக்கு நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய நாகராஜன் என்ற நபரை நேற்று(ஜன.30) போலீஸ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

News January 31, 2026

கும்மிடிப்பூண்டி அருகே துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(22). திருமணமாகி ஒரு ஆண்டில் கணவர் இறந்த நிலையில், கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.30) சக ஊழியர்களான அஜித்(22), மணிகண்டன்(37) ஆகியோருடன் பைக்கில் அல்லிபுகுளம் நோக்கிச் சென்றார். சாணப்புதூர் செல்லும் சாலையில் எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மகாலட்சுமி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!