News May 6, 2024
ஆற்காடு: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா முள்ளுவாடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்(45). இவர் நேற்று(மே 5) இரவு கலவை கூட்ரோட்டில் இருந்து முள்ளுவாடி ஏரிக்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கலவை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 7, 2025
ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவ.07) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் இணை இயக்குநர் செல்வராஜ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பின் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
News November 7, 2025
ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 7, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!

ராணிப்பேட்டை காவல்துறையினர் பொதுமக்களுக்கு இன்று (நவ.07) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் வாட்ஸ் ஆப் போன்ற மெசேஜிங் ஆப்ஸ்கள் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர். இவை மொபைல் மற்றும் தனிப்பட்ட தகவல்களை ஆபத்துக்கு உள்ளாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சந்தேகம் ஏற்பட்டால் www.cybercrime.gov.in -ல் புகார் செய்யவும் என கேட்டுக்கொண்டனர்.


