News May 6, 2024
காஞ்சிபுரம்: நள்ளிரவில் பெய்த கனமழை!

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சூரிய பகவான் தன் கோர தாண்டவத்தை காட்டினார். இந்நிலையில் இதனை சற்றே தணிக்கும் விதமாக வருண பகவான் கருணையால் நேற்று(மே 5) இரவு 11.30 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. காஞ்சி மாநகரமே இந்த மழையால் குளிர்ச்சி அடைந்துள்ளது. திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News July 5, 2025
காஞ்சிபுரத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா?

காஞ்சி என்பது பசுமை நிறம் அல்லது ஒரு வகை மரத்தை குறிக்கும் சொல், புரம் என்பது நகரம் என பொருள் தரும். ஆகவே, காஞ்சிபுரம் என்பது பசுமை வாய்ந்த நகரம் என்ற அர்த்தம் கொண்டது. புராணங்களில் காஞ்சிபுரம் பிரம்மா தோற்றுவித்த புனித நகரம் எனவும், பல தெய்வங்களின் திருத்தலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சைவ, வைணவ, பௌத்த, சமண மதங்கள் இங்கே செழித்து வந்துள்ளன. இதன் காரணமாகவே இது தெற்கின் காசி என அழைக்கப்படுகிறது.
News July 5, 2025
காஞ்சியில் முன்னாள் படைவீரர்கள் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இராணுவ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் தங்களின் SPARSH PPO மற்றும் SPARSH Updation SPARSH குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள 10.07.2025 ஆம் தேதி காலை 9.00 மணிமுதல் 1.00 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டம் வருகை புரிய உள்ளது. இம்முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
News July 4, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.