News January 17, 2026
நெல்லை: வீட்டில் கொள்ளையடித்த இரு கொள்ளையர்கள் கைது

சுத்தமல்லியை சேர்ந்த மூதாட்டி ஆண்டிச்சி என்பவரை கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து கட்டி போட்டு 25 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் வேட்டையை சேர்ந்த மணிகண்டன் ஜீவா ஆகிய இருவரும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னையில் நகைகளை மாற்றிய போது நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 7, 2026
பாளையங்கோட்டை சிறை ஜெயிலரை தாக்கிய கைதி

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் காவலராக பணி புரியும் சாம்பிரைட் என்பவரை தண்டனை கைதியான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (50) என்பவர் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சிறை அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 7, 2026
நெல்லை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

நெல்லை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <
News February 7, 2026
நெல்லை: தளபதி சமுத்திரம் குளத்தில் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் கீழூர் தெப்பக்குளத்தில் இன்று இரவு ஒருவர் விழுந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து நாங்குநேரி நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று அந்த நபரை சடலமாக மீட்டனர். விசாரணையில் இறந்த நபர் ஆறுமுகம்(65) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


