News January 17, 2026

ஆத்தூர் கூலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு திருவிழா!

image

ஆத்தூர்: கூலமேடு ஊராட்சியில் நாளை பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் 600 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அரசின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமுமின்றி போட்டியை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News February 8, 2026

சேலம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன்<> இங்கே கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

சேலம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

BREAKING: சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

image

சேலம், சீலநாயக்கன்பட்டியில் தவெக சார்பில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பிப்.13-ம் தேதி நடைக்கும் நிகழ்ச்சிக்கு பிற்பகல் 12 மணி முதல் 3 மணிக்குள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும், குழந்தைகள், கர்ப்பிணிகள் கலந்து கொள்ளகூடாது என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!