News January 17, 2026

வாடிவாசலுக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

image

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க, CM ஸ்டாலின் மதுரை, அலங்காநல்லூருக்கு விரைந்துள்ளார். காலை 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 1,100 காளைகளுக்கும், அவற்றை அடக்க 600 காளையர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ₹20 லட்சம் மதிப்பிலான காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு ஒரு டிராக்டரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

Similar News

News April 10, 2026

ஸ்டாலின் அளவுக்கு EPS-க்கு தைரியம் இல்லை: OPS

image

கொரோனா காலத்தில், இந்தியாவிலேயே மக்களை நேரில் சந்தித்த ஒரே CM ஸ்டாலின் தான் என OPS கூறியுள்ளார். EPS-க்கு அந்த அளவு தைரியம் இல்லை என்ற அவர், ஆனாலும் நிலைமையை திறமையாக கையாண்டது போல EPS தற்பெருமை பேசுகிறார் என்றார். இவ்வுலகில் அடிப்படை அரசியல் கண்ணியம் கூட இல்லாமல் யாராவது வாழ்கிறார்களானால், அது EPS தான் எனவும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், அவர் தோல்வியையே சந்திப்பார் என்றும் விமர்சித்துள்ளார்.

News April 10, 2026

வரலாற்றிலேயே முதல்முறை.. வாக்குப்பதிவு உயர்ந்தது

image

புதுச்சேரி, கேரளா & அசாம் மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் வரலாற்றில் முதல்முறையாக மொத்தமாக 89.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. 1964-க்குப் பிறகு ஒரு சட்டப்பேரவைத் தேர்தல் ஒன்றில்பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும். அதேபோல், அசாமில் 85.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2016 அசாம் தேர்தலில் 84.67% வாக்குகள் பதிவாகியிருந்தது.

News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. முதல்முறையாக பேசினார்

image

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே லீக்காவது மிகப்பெரிய வலியை தருவதாக H.வினோத் வருத்தப்பட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பலரது கனவை சுமந்துள்ளது; லீக்கான காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜன நாயகன் பிரச்னைக்கு பிறகு H.வினோத் முதல்முறையாக வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!