News January 17, 2026
தஞ்சை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து: வாலிபர் பலி

பாபநாசம் அடுத்த காஞ்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (28). இவர் நண்பர்களுடன் தஞ்சை வந்துவிட்டு வீடு திரும்பும் போது, தஞ்சை மேம்பாலம் அருகே டயர் வெடித்ததில், கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வில்சன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டி சென்ற லோகேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News January 25, 2026
தஞ்சை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் வியாபாரிகள், நெல் கொள்முதல் பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டால் கட்டணமில்லா எண்ணிற்கு 8005993540 புகார் அளிக்கலாமெனவும் கூறியுள்ளார்.
News January 25, 2026
தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜன.25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!


