News January 17, 2026

நுரையீரல் கழிவுகளை நீக்கும் அமுக்கரா தேநீர்!

image

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அமுக்கரா இலை (3-4), மிளகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.

Similar News

News February 19, 2026

தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும்: SP வேலுமணி

image

உழைக்கும் கோவை மக்களை <<19172256>>தயாநிதி மாறன்<<>> இழிவுபடுத்திவிட்டதாக SP வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். கோவை மக்களை இழிவுபடுத்தி அவர் பேசும்போது, செந்தில்பாலாஜி சிரித்துக் கொண்டிருப்பதாகவும் வேலுமணி சாடியுள்ளார். மேலும் திமுகவுக்கு கோவை என்றாலே வெறுப்புதான் வருவதாகவும், சர்ச்சை பேச்சுக்கு தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News February 19, 2026

உணவுப்பொருள்கள் வாங்கும் போது… இதை கவனிங்க

image

உணவுப்பொருள்களை வாங்கும் போது expiry date முதல் தரச்சான்று வரை கவனிக்கவும். நிறமூட்டிகள், சர்க்கரை, புராசஸிங் பொருள்களின் பயன்பாடு ஆகியன குறித்தும் கவனிக்க வேண்டியது அவசியம். பொதுவான உணவுப் பொருள்களுக்கு FSSAI தரச்சான்றும், நெய் எனில் அக்மார்க் முத்திரையும், பால், குடிநீருக்கு ISI முத்திரையும் இருக்கிறதா எனப் பாருங்கள். பொருள்களை எந்த வெப்ப நிலையில் வைக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

News February 19, 2026

மாநில சுயாட்சி பற்றி ஸ்டாலின் பேசலாமா? தமிழிசை

image

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கும்<<19173736>> CM ஸ்டாலின்<<>> மாநில சுயாட்சியை பற்றி பேசுவதாக தமிழிசை விமர்சித்துள்ளார். உள்ளாட்சிகளுக்கு உரிமை கொடுக்க முடியாதவர், எல்லா மாநிலங்களையும் பாரபட்சமும் இல்லாமல் ஆட்சி நடத்தும் மத்திய அரசை குறை கூறுவதாகவும் சாடியுள்ளார். தோல்வி பயத்தால் இதுபோன்ற விவகாரங்களை திமுக கையில் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!