News January 17, 2026

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 6, 2026

ராணிப்பேட்டையில் நாளங்காடி திறப்பு

image

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.11.52 கோடியில் கட்டப்பட்ட நாளங்காடியை நேற்று (பிப்.5) காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வாரச்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள இந்த நாளங்காடியில் சில்லறை, மொத்த வியாபார கடைகள், குளிர்சாதன கிடங்கு, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.

News February 6, 2026

ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

புலிவலம் பகுதியில் நேற்று (பிப்.5) இரவு புல்லட் ஒன்று புதரில் விழுந்து கிடந்தது. இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அந்நபர் இன்று (பிப்.6) உயிரிழந்தார். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் விசாரித்ததில் அந்நபர் நந்திமங்கலத்தை சேர்ந்த முருகன் (42) என்பது தெரிய வந்தது.

News February 6, 2026

ராணிப்பேட்டையில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

அரக்கோணம், பள்ளூர், தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு நாளை (பிப்.7) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 – 3 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

error: Content is protected !!