News May 6, 2024
+2 மாணவர்களே இதை செய்யுங்கள்

கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.
Similar News
News November 7, 2025
கரூர்: தீக்குளித்த ஊழியர் பலி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புதுப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (39), பைனான்ஸ் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து மனவிரக்தியில் இருந்த அவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு உயிரிழந்தார். மனைவி சித்ராதேவி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
கரூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

கரூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
கரூர்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) கரூர் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இந்த தகவலை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


