News May 6, 2024
பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இன்று முதல் ஜூன் 6 வரை www.tneaonline.org – www.dte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாகவும், மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம், ஓ.சி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ.500, மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250.
Similar News
News March 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 632 ▶குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. ▶பொருள்: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
News March 14, 2026
உச்சநீதிமன்ற நிர்வாகத்தை இனி AI கவனிக்கும்!

கடந்த 2022-ல் Ex SC CJI சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது ஒரு புதிய அமர்வின் முன் மீண்டும் பட்டியலிடப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்த விசாரணையில் SC-ன் பதிவகத்தில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து வழக்கு ஒதுக்கீடு & அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த CJI சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.
News March 14, 2026
எங்கள் ஆடையால் உங்களுக்கு என்ன பிரச்னை? ராஷி கண்ணா

எந்தவொரு பெண்ணுக்கும் தனக்கு பிடித்த ஆடைகளை அணியும் சுதந்திரம் உண்டு என்று ராஷி கண்ணா கூறியுள்ளார். <<19291889>>நடிகைகளின் உடை அணியும் பாணி <<>>குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை சார்ந்தது என்றார். அத்துடன் நாங்கள் அணியும் ஆடையால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


