News May 6, 2024
நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து

கடந்த ஐந்து மாத காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின் நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடந்த ஆண்டு அக்.14ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், குறைந்த அளவே மக்கள் பயணித்ததன் காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 13 முதல் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
Similar News
News March 16, 2026
பெண்ணை கடித்து குதறிய நாய்கள்.. போலீசார் அதிர்ச்சி

புனேவில் பெண் ஒருவர் இறப்பு தொடர்பாக வெளியான CCTV போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டபோது, முதலில் கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் CCTV-ல் பதிவாகியிருந்த காட்சிகள் அவர்களை. அதிகாலையில் நடந்துசென்ற பெண்ணை சூழ்ந்த நாய்கள் சரமாரியாக கடித்து குதறியதும், அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
News March 16, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கும் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. SHARE IT
News March 16, 2026
ரஜினியிடம் ஆதவ் மன்னிப்பு கேட்கணும்: நயினார்

திமுக மிரட்டியதாலேயே ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிய ஆதவ் அர்ஜுனாவிற்கு, நயினார் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளரான ரஜினி குறித்து ஆதவ் பொதுவெளியில் தவறாகப் பேசியது ஏற்புடையதல்ல என்று X தளத்தில் நயினார் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ரஜினி & அவரது ரசிகர்களிடம் ஆதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


