News January 16, 2026

கடலூர்: ஒரே இடத்தில் 9 லிங்க தரிசனம்

image

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே நவலிங்க சன்னதி அமைந்துள்ளது. இங்கு 9 லிங்கங்களை நாம் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய முடியும். இங்கே பக்தர்கள் சர்வ பிரார்த்தனை மேற்கொண்டு வழிபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நவலிங்க சன்னதி அமைந்துள்ள ஒரே கோவில் இதுவே என்பது சிறப்பம்சமாகும். உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News January 26, 2026

கடலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

image

1. கடலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

News January 26, 2026

வடலூர்: ஜோதி தரிசனம் நேரம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 5. 30 மணி என 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

கடலூர்: தனியார் விடுதியில் இளைஞர் தற்கொலை

image

புவனகிரி வட்டம், மதுராந்தகநல்லூரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (26). திருமணமான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் அப்பெண்ணுடன் தங்கியிருந்த ஹரிதாஸ் நேற்று இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!