News January 16, 2026

காஞ்சிபுரம்: காணும் பொங்கலுக்கு இன்னும் பிளான் பண்ணலையா?

image

கோயில்களின் நகரம் என்றும், பட்டுப் புடவைகக்குப் புகழ்பெற்றதுமான காஞ்சிபுரம், ஆன்மீகம் & கலாச்சாரத்தின் மையமாகும்.இத்தகைய சிறப்புமிக்க நகரில், இந்தக் காணும் பொங்கலுக்கு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சி குடில் & காஞ்சி மடத்திற்கு உங்கள் குடும்பத்துடன் சென்று ஆன்மீகப் பெருமையையும், பாரம்பரியக் கலையையும் ரசித்தபடி இந்த பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 28, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

image

எம்..ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(28). ஆட்டோ டிரைவரான இவர், தனது நண்பர் பிரகாஷுடன் தேனாம்பாக்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். மது வாங்கச் சென்ற இடத்தில் இவருக்கும் பிரகாஷின் நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், நாகராஜின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். நாகராஜ் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 28, 2026

காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

மாங்காடு அடுத்த முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அக்சிதா(20). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு +2 படித்து முடித்தார். இந்நிலையில், இவரை வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், நேற்று முன் தின ம் இரவு, தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த மவுலிவாக்கம் போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 28, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு – இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!