News January 16, 2026

இந்தியாவில் விளையாட மறுப்பு: சமரசம் பேச களமிறங்கும் ICC

image

T20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியின் பங்கேற்பை உறுதிசெய்ய ICC முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. விரைவில் ICC குழு வங்கதேசத்திற்கு நேரடியாக சென்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. வீரர்களின் பாதுகாப்பு காரணமாக, இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச அணி, போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிய நிலையில், சிக்கலுக்கு தீர்வு காண நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Similar News

News February 6, 2026

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இடைஞ்சல்: உதயநிதி

image

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று DCM உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு என்கிற வார்த்தையே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும், மத்திய அரசு TN-ஐ பல வகைகளில் வஞ்சித்து, பல்வேறு இடைஞ்சல்களைக் கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பே EPS பாராட்டு தெரிவித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

News February 6, 2026

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஜன.28 அன்று அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, நாளை(பிப்.7 சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் விழாவிற்காக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, கரூர் வட்டத்திற்கும் நாளை வேலைநாளாகும். ஏனைய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைதான்.

News February 6, 2026

பறவை எச்சிலை சூப் வைத்து குடிக்கிறாங்க.. எங்க தெரியுமா?

image

எச்சிலை வைத்து கூடு கட்டும் பறவைகள் தான் ஸ்விஃப்ட்லெட்(Swiftlets). அப்படி கட்டப்பட்ட அந்த கூட்டை, அறுவடை செய்து சூப் வைத்து சாப்பிடும் பழக்கம் சீனர்களிடையே இருக்கிறது. இதை ஜெல்லி, ஸ்வீட் போலவும் சாப்பிடும் அவர்கள், இது சுவையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த பறவையின் எச்சிலில் அதிக சத்துகள் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். தாய்லாந்து, பாங்காக்கிலும் இந்த உணவு கிடைக்கும். உங்கள் கருத்து?

error: Content is protected !!