News January 16, 2026
அதிமுக ஆபிஸில் தற்கொலை.. இபிஎஸ் அதிர்ச்சி

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பகுதி செயலாளர் சுகுமார் உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த சில நாள்களாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அவர், கட்சி அலுவலகத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றிய போலீசார், குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணங்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
தஞ்சை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

தஞ்சை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு நாளை கூட்டணி பற்றி அறிவிப்பேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். இதுவரை எந்த கூட்டணியிலும் சேராத ஓபிஎஸ், NDA கூட்டணியில் இணைவார் என கூறப்படுகிறது. இதற்கு இசைவு தெரிவித்துள்ள ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, 3 சீட்கள் பெற்று தனது மகன் & ஆதரவு நிர்வாகிகளை குக்கர் சின்னத்தில் நிற்க வைக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
News January 28, 2026
நடிகர் விஜித்துக்கு திருமணம் ❤️❤️❤️(PHOTOS)

‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான். இந்நிலையில் அவருக்கும், பிரீத்தா என்பவருக்கும் திருப்பதியில் கோலகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமண போட்டோஸ் SM-ல் வைரலாகும் நிலையில், விஜித் – பிரீத்தா தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிகின்றனர்.


