News January 16, 2026

திருப்பூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News January 22, 2026

திருப்பூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படாத நிலையில் வருகின்ற 30ஆம் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

திருப்பூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 22, 2026

திருப்பூர்: ரயிலில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

image

திருப்பூர் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் இன்று ரயில் நிலையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பின்பக்க பின் பதிவில்லா பெட்டியில் சோதனை செய்தனர். சோதனையில் கேட்பாரற்று கிடந்த பையில் 35 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!