News January 16, 2026
BREAKING: விஜய் முக்கிய முடிவு

அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காதது சர்ச்சையாக உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் பேசிய தவெகவின் CTR நிர்மல் குமார், தேவை ஏற்படும் போது நிச்சயமாக விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார் என்றும், அவருக்கு பயம் கிடையாது எனவும் கூறியுள்ளார். ஒருவேளை விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தால் முதல் கேள்வியாக என்ன கேட்கலாம்?
Similar News
News February 3, 2026
மதுரை: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

மதுரை அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாகரன்(29) என்பவர் சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி பொற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரபாகரணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News February 3, 2026
தூத்துக்குடி: வாலிபரை எரித்துக் கொன்ற டிரைவருக்கு ஆயுள்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.
News February 3, 2026
திமுகவை வீழ்த்தும் சக்தி விஜய்க்கு இல்லை: உதயகுமார்

திமுகவை தவெகவால் மட்டுமே வீழ்த்த முடியும் என விஜய் பேசியதற்கு EX அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் தவறை தட்டி கேட்டு அதை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுக மட்டும்தான் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், தேர்தல் முடிவுக்கு பிறகு யார் களத்தில் உள்ளார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


