News January 16, 2026

ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை: சச்சின் பைலட்

image

ஆட்சி அதிகாரத்தில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை என்று சென்னையில் காங்., முக்கிய தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸுக்கு என்று தனி வாக்கு சதவிகிதம் இருக்கிறது எனக்கூறிய அவர், பல கட்சிகள் கேட்பதுபோலத்தான், காங்., நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர் என்றும், பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்ல, எப்போதும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

இதை நினைத்தால் கவலையாக இருக்கு: தோனி

image

இந்திய டி20 அணியை மிகவும் அபாயகரமான அணி என தோனி தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான அனுபவம், கடினமான சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறன் என அனைத்தும் இந்திய வீரர்களுக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், பனிப்பொழிவின் தாக்கத்தினால் போட்டிகளின் முடிவுகள் மாறுவதாக குறிப்பிட்ட அவர், அதுமட்டுமே தனக்கு கவலை தரக்கூடிய விஷயம் என பேசியுள்ளார்.

News February 4, 2026

பிரபல இசையமைப்பாளர் காலமானார்

image

காஞ்சிபுரம் வட்டாரத்தில், மேடை மெல்லிசை நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் கார்த்திக் குணா உடல்நலக்குறைவால் காலமானார். கீபோர்ட் வாசிப்பதில் கைதேர்ந்த இவர் காஞ்சிபுரம் பற்றி இசையமைத்த பாடல் SM-ல் வைரலாகி இருந்தது. சில தமிழ் குறும்படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் குணாவின் மறைவிற்கு இசைத்துறையை சேர்ந்த பலரும், அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 4, 2026

பிப்ரவரி 4: வரலாற்றில் இன்று

image

உலகப் புற்றுநோய் நாள் *1747–தமிழறிஞர் வீரமாமுனிவர் நினைவு நாள் *1895–நாடக நடிகர் பி.ஏ.சுப்பையா பிள்ளை பிறந்தநாள் *1943–பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் பிறந்தநாள் *1974–இயற்பியலாளார் சத்தியேந்திர நாத் போஸ் நினைவு நாள் *1985–பதிப்பாசிரியர் மே.வீ.வேணுகோபாலன் நினைவு நாள் *2004–பேஸ்புக் தொடங்கப்பட்ட நாள் *2023–பாடகி வாணி ஜெயராம் நினைவு நாள்

error: Content is protected !!