News January 16, 2026
சற்றுமுன்: செங்கோட்டையன் தரப்பு அதிர்ச்சி

தவெகவில் விஜய், புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்த இடத்தில் செங்கோட்டையன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் பொது மேடைகளில் பேசி வருகின்றனர். ஆனால், சற்றுமுன் <<18871253>>விஜய் வெளியிட்ட பிரசார பணிக்குழுவில்<<>> செங்கோட்டையன் பெயர் ஆதவ் அர்ஜுனாவின் பெயருக்கு அடுத்ததாக இடம் பெற்றது சர்ச்சையாகியுள்ளது. பிரசார கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கே வழிகாட்டியவரை மட்டுப்படுத்துகிறாரா விஜய் என ஒருசாரார் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் கருத்து?
Similar News
News January 28, 2026
மல்லாக்கப்படுத்த இந்தியாவின் மானம்.. 400 மீ-க்கு ₹18,000!

USA-விலிருந்து மும்பை வந்த அர்ஜெண்டினோ அரியானோ, ஏர்போர்ட்டில் இருந்து ஹோட்டலுக்கு செல்ல டாக்ஸியில் ஏறுகிறார். அந்த டாக்ஸி டிரைவர் வேண்டுமென்றே ஊரை சுற்றி வெறும் 400 மீட்டர் தொலைவில் இருந்து ஹோட்டலில் இறக்கிவிட்டு, ₹18,000 வாங்கியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரியானோ, இது குறித்து அர்ஜெண்டினோ பதிவிட, இந்தியாவின் மானமே போவதாக நெட்டிசன்கள் கடுமையாக சாடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 28, 2026
அரசு லேப்டாப்பை ஆன்லைனில் விற்கும் மாணவர்கள்!

தமிழக அரசின் இலவச லேப்டாப்களை சிலர் ₹10,000 – ₹20,000 வரை ஆன்லைனில் விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு லேப்டாப் மிகவும் முக்கியம் என்பதால், லேப்டாப்களை அவர்கள் விற்பனை செய்வதை தடுக்கும்படி அரசுக்கு பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, இலவச லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி துவக்கி வைத்தார்.
News January 28, 2026
ஜன நாயகன்.. எதிர்பாராத அதிரடி திருப்பம்

‘ஜன நாயகன்’ வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை சென்னை HC ரத்து செய்துள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர் பராசரனுடன் தயாரிப்பு நிறுவனம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, இந்த வழக்கையே வாபஸ் பெற்று மறு ஆய்வுக் குழுவுக்கு (RC) அனுப்ப படக்குழு திட்டமிடுகிறதாம். இவ்வாறு நடந்தால், அடுத்த 2 வாரங்களில் சான்றிதழ் பெற்று தேர்தலுக்கு முன்பு படத்தை வெளியிடலாம் என கூறப்படுகிறது.


