News January 16, 2026
அரியலூர்: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 8, 2026
அரியலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

அரியலூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
News February 8, 2026
அரியலூர்: குரூப்-2, 2 ஏ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

அரியலூர் மாவட்டத்தில் குரூப்-2, 2 ஏ முதன்மை எழுத்து தேர்வுகள் இன்று காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளைகளில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதுவோர் நேரத்திற்குள் வரவேண்டுமெனவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எடுத்துவரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
அரியலூரில் வேலைவாய்ப்பு – கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க, மாவட்ட மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் 06 வட்டாரங்களில், காலியாக உள்ள 16 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருகிற பிப்.16ம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மேலாண்மை அலகு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க!


