News January 16, 2026
பெரம்பலூர்: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News April 9, 2026
பெரம்பலூர்: வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட IJK நிறுவனர்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து, IJK கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், நேற்று வேப்பந்தட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என தெரிவித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
News April 9, 2026
பெரம்பலூர்: உச்சம் தொட்ட வெயிலின் தாக்கம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாகம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 81 டிகிரியும், அதிகபட்சமாக 102 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
News April 9, 2026
குன்னம்: IJK வேட்பாளர் மீது புகார் அளித்த அமைச்சர்

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சிவசங்கரை 5 ஆண்டு ஆட்சியில் குன்னம் தொகுதியில் மக்களுக்கு முறையான ஆட்சி இல்லை, பாதுகாப்பு இல்லை என IJK வேட்பாளர் சரண்யா சமூக வலைதள பதிவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ தனக்கும் உண்மைக்கு புறம்பாக, தனது பெயரை களங்கம் விளைவிக்கிறது எனவும் குன்னம் காவல் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.


