News January 16, 2026
வேண்டியதை அருளும் சேலம் கோட்டை மாரியம்மன்!

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீற்றிருக்கும் கோட்டை மாரியம்மன், நகரின் எட்டு மாரியம்மன்களில் மிகவும் பெரியவளாகவும், சக்தி வாய்ந்தவளாகவும் போற்றப்படுகிறாள். இங்கு வந்து அம்மனை வேண்டினால் அம்மை நோய், உடல் குறைபாடுகள் நீங்குவதோடு, குழந்தை வரம் மற்றும் தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. இந்த ஆன்மீகத் தகவலை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 29, 2026
சேலத்தில் விஜய் கட்சியினரை தட்டி தூக்கிய EPS!

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் தவெக நகர செயலாளர் வினோத்குமார், தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இது தவெகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 29, 2026
டெல்டா விவசாயத்திற்கு விடை கொடுத்த மேட்டூர்

மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12 முதல் டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர், 230 நாட்களுக்குப் பிறகு இன்றுடன் நிறுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 222 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாசனத் தேவைகள் நிறைவடைந்ததால் நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.