News January 16, 2026
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (06160) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜன.18 (ஞாயிறு) அன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக திங்கள் காலை 4 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

இன்று (23.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News January 23, 2026
குமரி: ரயில் நேரத்தில் மாற்றம்!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கன்னியாகுமரியிலிருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன. 26 அன்று அதிகாலை 3.45 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *SHARE
News January 23, 2026
நாகர்கோவில்: 6ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை!

நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை பார்த்து வந்த சிவா என்பவர் அந்த விடுதியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேசமணி நகர் போலீசார் 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிபதி நேற்று சிவாவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்


