News January 16, 2026
ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், சாம்பா மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ட்ரோன்கள் மீண்டும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் ஊடுருவல் குறித்து <<18852930>>இந்திய ராணுவம்<<>>, சில நாள்களுக்கு முன்புதான் பாக்.-ஐ எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன்கள் பறந்ததால், அவற்றை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News January 22, 2026
என்கவுன்டரில் 15 நக்சல்கள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட், சாரண்டா வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 15 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் ₹1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய தலைவர் பதி ராம் மஞ்சி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான நவீன ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 22, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி இணைந்தது

சென்னையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சந்தித்து ஆலோசித்துள்ளார். கடைசி நேரத்தில் கூட கூட்டணி கணக்கு மாறக்கூடும் என சமீபத்தில் அவர் கூறியிருந்ததால், தமமுக அணி மாறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பியூஷ் கோயலை சந்தித்து, அதிகாரப்பூர்வமாக NDA கூட்டணியில் இணைந்துள்ளார். அவருக்கு தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 22, 2026
நகைக் கடன்.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்கப்படுவதாக கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளன. சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், பட்டா ஆவணத்தையும், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், உரிய குத்தகை ஒப்பந்த ஆவணத்தையும் வழங்க வேண்டும். இதனுடன் அடையாள ஆவணங்கள், நகை விவரங்களையும் சமர்ப்பித்தால், தாமதமின்றி உடனே விவசாய நகைக்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


