News January 16, 2026
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகை உயர்த்தபட வேண்டும். 2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக செலுத்தப்பட வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள், சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். உடனே ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 10, 2026
திருப்பத்தூர் SP அதிரடி; ஒரே நபரிடம் ரூ.26,00,000!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் நேற்று (09.02.2026) “முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் ₹26,00,000/- தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தனர்.
News February 10, 2026
வாணியம்பாடியில் உடல் தூக்கி வீசப்பட்டு பலி

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு. இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (பிப்.9) தனது வீட்டு அருகே வாணியம்பாடி ரயில் நிலையம் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தூக்கிவீசப்பட்டு சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 10, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


