News January 16, 2026

கள்ளக்குறிச்சியில் ரகளை – வேடிக்கை பார்த்தது குத்தமா?

image

சோழவாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (19) நேற்று அதே பகுதியில் உள்ள கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வேகமாக சென்ற வசந்த் (22) என்பவரை மெதுவாக போகச் சொல்லி அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வசந்த், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வெற்றிவேலை தாக்கினார். பதிலுக்கு வெற்றிவேல் நண்பர்களும் தாக்கினர். இதுகுறித்து 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News January 30, 2026

திடீரென திரும்பிய கார் மீது பைக் மோதி விபத்து!

image

தென்சிறுவலூரை சேர்ந்த ரகுபதி தனது நண்பர் கவியரசனுடன் சாரதி என்பவரது பைக்கில் கள்ளக்குறிச்சி ஆர்டிஓ ஆபீஸிற்கு சென்றுள்ளார். அப்போது ஏமப்பேர் பைபாஸ் பகுதியில் இன்று எந்தவிதமான செய்கையும் செய்யாமல் திடீரென சாலை கடக்க முயன்ற லியோ ஸ்டேன்லியின் கார் பைக் மீது மோதியது. இதில் கவியரசன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News January 29, 2026

வேலைவாய்ப்பு துறை சார்பில் மாவட்ட திறன் குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் மாவட்ட திறன் குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 29, 2026

குறள் வார விழா போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறள் வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (29.01.2026) அவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டுகளை தெரிவித்தார். இதில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பங்கேற்பு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

error: Content is protected !!