News January 16, 2026
BREAKING: கூட்டணி குறித்து நாளை காங்., இறுதி முடிவு

‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் எனக்கோரி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்., கட்சியினர், தவெக பக்கம் செல்ல விரும்புவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கவும், சட்டப்பேரவை தேர்தல், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவும் தமிழக காங்., தலைவர்களுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளது. இதன்பிறகு கூட்டணி (DMK அல்லது TVK) குறித்த அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகவுள்ளது.
Similar News
News February 16, 2026
ரஷ்மிகாவின் திருமண Invitation!

ரஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் Invitation ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தங்களுக்கு 26-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக, Reception மார்ச் 4-ம் தேதி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. Invitation-ஐ பார்க்க இடது பக்கமாக Swipe செய்யவும்.
News February 16, 2026
மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? செல்வப்பெருந்தகை

ராகுல், கார்கேவை விட மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பெரிய ஆட்களா என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என <<19148271>>தீர்மானம்<<>> நிறைவேற்றியது தனக்கு தெரியாது என கூறிய அவர், கூட்டணி பற்றி அறைக்குள் வைத்து பேசவேண்டியவற்றை பொதுவெளியில் பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், இவ்வளவு நாள் விட்டுவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இப்படி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 16, 2026
அஜித் குமார் வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

கோயில் காவலாளி அஜித் குமார், நிகிதாவின் நகையை திருடியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என மதுரை ஐகோர்ட்டில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அஜித் கொலைக்கு காரணமான காவலர்களை மன்னிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித் கொலை வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், மேலும் பல பரபரப்பு தகவல்கள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.


