News January 16, 2026
தென்காசி: பட்டாசு தயாரித்தவர் கைது!

சிவகிரி அருகே எ.சுப்பிரமணியபுரத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த புதியராஜ் (42) என்பவர், கடந்த 10 நாள்களாக அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்தாராம். தகவலின்பேரில், புளியங்குடி போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு, 240 கிலோ மேற்பட்ட வெடி தயார் செய்யும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து புதியராஜை கைது செய்தனர்.
Similar News
News January 31, 2026
தென்காசி : இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘இங்கே <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
தென்காசி: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

தென்காசி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <
News January 31, 2026
தென்காசி: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்

கடையம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று மார்பி தாமஸ் தோட்டத்தில் 9 தென்னை, 2 பனை மரங்கள், மரிய ஜெகநாதன் தோட்டத்தில் 3 தென்னை, ராஜாபால் தோட்டத்தில் 6 தென்னை மரங்களை காட்டு யானைகள் சாய்த்து சேதப்படுத்தின. கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


