News January 16, 2026
பாலமேடு ஜல்லிக்கட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை, தீரமுடன் தழுவி அதிக காளைகளை தழுவும் வீரருக்கு முதல் பரிசாக ஒரு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட உள்ளது. களத்தில் நின்று விளையாடி , பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.
Similar News
News January 21, 2026
மதுரை: எல்லா CERTIFICATES-ம் இனி உங்க Whatsapp-ல்

மதுரை மாவட்ட மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளை எளிதில் பெறலாம். பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News January 21, 2026
மதுரை: சாலை விபத்தில் இளைஞர் பரிதாப பலி..!

திருவாதவூர் அருகே உள்ள பனங்காடியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மணிகண்டன்(21). நேற்று முன்தினம் மாலை இவர் டூவீலரில் மேலூர் மேலவளவு சாலையில் அதிவேகமாக சென்ற போது, சுக்காம்பட்டி அருகே வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 21, 2026
மதுரையில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை..!

மதுரை மாவட்டத்தில் முக்கிய இடங்களில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரிட்டாபட்டி, குன்னத்தூர், திருவாதவூர், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட துணைமின் நிலையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜன.21) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என, மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். SHARE IT..


