News January 16, 2026
ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விரைந்தார் உதயநிதி!

மதுரை, பாலமேட்டில் இன்னும் சற்றுநேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக காலையிலேயே எழுந்து தயாரான அவர், வாடிவாசலுக்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் போட்டியானது தொடங்க உள்ளது. இன்று 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் களம் காண காத்திருக்கின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
Similar News
News January 30, 2026
தைப்பூசம் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி மக்கள் ஊர்களுக்குச் செல்ல இன்று முதல் 3 நாள்களுக்கு அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், அனைத்து பஸ் நிலையங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் உடனே டிக்கெட்களை முன்பதிவு செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள்! SHARE IT.
News January 30, 2026
காங்.,க்கும் திருப்பி அடிக்க தெரியும்: மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் மீது மதுரை வடக்கு தொகுதி <<18969847>>திமுக MLA தளபதி<<>> வைத்த விமர்சனத்துக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை வடக்கு தொகுதியை திமுகவிடம் இருந்து கேட்டுப்பெறுவது குறித்து கார்கேவிடம் வலியுறுத்தியதாகவும், காங்கிரஸுக்கும் திருப்பி அடிக்க தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்தியவர்களிடம் தயவுதாட்சண்யம் பார்ப்பதில்லை எனவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
News January 30, 2026
ரயிலில் கணிதம் படித்து விஞ்ஞானி ஆனவர்!

கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தினால், யாரும் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு ஆரோக்கியசாமி வேலுமணி ஒரு உதாரணம். கோவையை சேர்ந்த இவர், வெகு தொலைவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் படித்துள்ளார். வறுமையின் காரணமாக ஹாஸ்டலில் தங்க முடியாமல் தினமும் 6 மணிநேரம் ரயிலில் பயணித்தவர், அப்போது கணிதம் & இயற்பியல் படிக்க தொடங்கியுள்ளார். அதுவே அவரை தற்போது BARC விஞ்ஞானியாக மாற்றியுள்ளது.


