News January 16, 2026
நீங்களும் கடன் வாங்கி EMI கட்டுறீங்களா?

இன்ஸ்டன்ட் லோன் ஆப்கள், கிரெடிட் கார்டுகளால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் EMI எனும் பெரும் கடன் வலையில் சிக்கியுள்ளது Eresolution Consultancy நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 10,000 பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், ₹35,000 – ₹65,000 வரை மாத சம்பளம் வாங்கும் 85% பேர் தங்களது சம்பளத்தில் 40% EMI செலுத்துகின்றனர். அடிப்படை தேவைகளுக்கு கூட அவர்கள் பணம் இல்லாமல் தவிப்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News February 8, 2026
362 பாகிஸ்தான் வீரர்களை காலி செய்த BLA

கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. 14 நகரங்களில் 76 தாக்குதலை நடத்தியதாக கூறும் BLA, 364 ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தங்கள் தரப்பில் 93 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதிலும் தற்கொலைப்படை தாக்குதலில் மட்டும் 50 பேர் உயிரை பறிகொடுத்ததாகவும் கூறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவமும், அரசும் நிலைகுலைந்து நிற்கின்றன.
News February 8, 2026
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைகிறது!

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருவதாலும், போர் பதற்றம் மெல்ல மெல்ல குறைவதாலும் 1 சவரன் தங்கத்தின் விலை ₹70,000 ஆக குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த மாற்றம் உடனடியாக நிகழாது என்றும் படிப்படியாக தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்துகின்றனர். உஷார் மக்களே!
News February 8, 2026
மாரடைப்பு வரும்.. இதெல்லாம் செய்யாதீங்க!

மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல்நல பாதிப்பு என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவை தவறு. தினசரி நாம் கடைப்பிடிக்கும் ஒரு சில பழக்கங்கள், நாளடைவில் மாரடைப்பை உண்டாக்குகின்றன. அவை என்னென்ன பழக்கங்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தா உடனே மாத்திக்கோங்க. ஹெல்தியா இருங்க!


