News January 16, 2026

SKY குறித்த கருத்து.. ₹100 கோடி கேட்டு நடிகை மீது வழக்கு

image

SKY குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததாக அவரது ரசிகர் ஃபைசன் அன்சாரி என்பவர், நடிகை குஷி முகர்ஜி மீது ₹100 கோடிக்கு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகையின் கருத்து SKY-ன் மரியாதைக்கு களங்கம் விளைவித்ததாகவும், அதனால் நடிகையை 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஃபைசன் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, SKY தனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக நடிகை கூறியிருந்தார்.

Similar News

News February 16, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹960 குறைந்தது

image

சென்னையில் தங்கம் விலை இன்று(பிப்.16) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹120 குறைந்து ₹14,440-க்கும், சவரன் ₹960 குறைந்து ₹1,15,520-க்கும் விற்பனையாகிறது. <<19154307>>சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின்<<>> காரணமாக இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

News February 16, 2026

பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!

image

4 நாள் பயணமாக இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் வருகை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரான்ஸ் தற்போது இந்தியாவின் 2-வது பெரிய பாதுகாப்பு சப்ளையராக உள்ளது. அதன்படி அவரது இப்பயணத்தில் HAMMER ஏவுகணைகளின் கூட்டு உற்பத்தி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 114 ரஃபேல் போர் விமானங்களுக்கான முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 16, 2026

எவ்வளவு உடற்பயிற்சி செய்தும் எடை குறையவில்லையா?

image

ஜிம்மில் உடற்பயிற்சி, தினமும் ஜாகிங் என கடினமாக முயன்றும் எடை குறையவில்லை என்று பலர் புகார் செய்வதுண்டு. அதற்கு அதிக கலோரிகளை எரித்துவிட்டதாக நம்புவதும், உடற்பயிற்சிக்கு பிறகு அதிகமாக சாப்பிடுவதுமே காரணம் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி செய்தாலும் உணவு கட்டுப்பாடு என்பது மிக முக்கியம். அதே போன்று சரியான தூக்கம் இல்லையென்றாலும் எடை குறையாது எனவும் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!