News January 16, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News February 2, 2026
TN அரசில் 709 வேலைவாய்ப்பு.. உடனே முந்துங்க

மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களில் மொத்தம் 709 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆபிஸ் அசிஸ்டண்ட், டிரைவர், நைட் வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. சம்பளமாக ₹15,700 வழங்கப்படும். ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
News February 2, 2026
அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்!

அத்திப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. நன்மைகள்: *உடலில் செரிமான அமைப்பு பலப்படுவதால் மலச்சிக்கல், வாயு தொல்லை ஏற்படாது * நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடை இழப்புக்கு உதவுகிறது *ரத்த சோகைக்கு தீர்வு *ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருப்பதால் சருமத்திற்கும் நல்லது
News February 2, 2026
கூட்டணி விஷயத்தில் தவிக்கும் ராமதாஸ்

NDA-வில் இணைய அன்புமணி முட்டுக்கட்டை போடுவதால், ராமதாஸ் தரப்பு பாமக திமுக கூட்டணியில் இணையலாம் என பேசப்பட்டது. ஆனால், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என திருமா கூறியதால், ராமதாஸ் தரப்பு பாமகவுடன் கூட்டணிப் பேச்சை திமுக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. தவெகவுடன் கூட்டணி இல்லை என காந்திமதி தெரிவித்திருந்தார். இதனால், எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் ராமதாஸ் தவிக்கிறாராம்.


