News January 15, 2026
உங்கள் மனம் கவர்ந்த பொங்கல் ரிலீஸ் எது?

பொங்கல் திருநாள் என்றாலே கரும்பு, சர்க்கரை பொங்கல், புத்தாடையுடன் புதுப்படங்களும் தமிழர்களின் வாழ்வில் இணைந்துவிடும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸாகவில்லை. எனினும் சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் வா வாத்தியாரே, ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஆகியவை பொங்கல் ரீலிசாக வெளிவந்துள்ளன. இவற்றில் எந்த படத்தை பார்த்தீர்கள்? எது உங்களின் மனம் கவர்ந்தது? கமெண்ட் பண்ணுங்க..
Similar News
News February 3, 2026
நீலகிரி: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
பிரபல இசையமைப்பாளர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பழம்பெரும் இசையமைப்பாளர் SP வெங்கடேஷ்(70) மாரடைப்பால் காலமானார். கிட்டார் கலைஞராக இசைப் பயணத்தை தொடங்கிய அவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘உனக்காக என் காதல்’, ‘பிஞ்சு மனசு’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ள வெங்கடேஷ், ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. RIP
News February 3, 2026
வரியை குறைக்க வைத்த இந்தியாவின் ராஜதந்திரம்

இந்தியாவை ‘Tariff King’ என விமர்சித்த US அதிபர் டிரம்ப், தற்போது நண்பர் என்று கூறி வரியை குறைத்துள்ளார். US-ன் கூடுதல் வரிவிதிப்புக்கு பிறகு இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தது போன்றவை USA-ஐ கலங்கடித்திருக்கலாம் எனப்படுகிறது. அதன் காரணமாகவே, US அதிபர் வரியை 50%-ல் இருந்து 18%-ஆக குறைத்து அறிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


