News January 15, 2026

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் CM மரியாதை!

image

பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று CM ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். மேலும், நாராயணப்பதெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்தவர், அங்கு வசித்துவரும் துரை-சுமதி என்ற தம்பதியரின் ஆண் குழந்தைக்கு ‘வெற்றி’ என்று பெயர் சூட்டியுள்ளார்.

Similar News

News January 30, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 30, தை 16 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News January 30, 2026

ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு!

image

கடவுளை கேலி செய்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது பெங்களூரு போலீஸ் FIR பதிவு செய்துள்ளது. கோவாவில் கடந்தாண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தது சர்ச்சையானது. இதுகுறித்து அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 30, 2026

விராட் கோலியை காணவில்லை என ரசிகர்கள் புகார்!

image

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கை காணவில்லை என்ற ஸ்கிரீன் ஷாட்களை ரசிகர்கள் SM இல் பதிவிட்டு வருகின்றனர். கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதா அல்லது கோலி தானே இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினாரா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அவரை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!