News January 15, 2026
ICC விருதை தட்டித்தூக்கிய வீரர்கள்!

டிசம்பர் மாதத்திற்கான ICC-யின் சிறந்த வீரர் விருதை ஆஸி.,யின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் 31 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சிறந்த வீராங்கனைக்கான விருதை தென்னாப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் லாரா வோல்வார்ட் கைப்பற்றியுள்ளார். கடந்த மாதம் 3 சதங்கள் உட்பட 392 ரன்கள் குவித்து அவர் கவனம் ஈர்த்திருந்தார்.
Similar News
News February 10, 2026
விஜய் முதல்ல இத சொல்லட்டும்: CPI

விஜய்யுடன் சேர்ந்திருப்பவர்கள் புதுச்சிந்தனை உள்ளவர்களா என CPI வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப்போர் காலங்களில் முன்னோர்கள் கனவு கண்ட சமூகம் நமக்கு தேவை என்ற அவர், அதுபற்றிய சிந்தனை விஜய்யிடம் எதாவது இருக்கிறாதா எனவும் கேட்டுள்ளார். மேலும், உலகம் முழுவதும் வலது, இடது என இரு கொள்கைதான் இருக்கிறது எனவும் அதில் விஜய் எந்த பக்கம் என்பதை அவர் முதலில் சொல்லட்டும் என்றும் கூறியுள்ளார்.
News February 10, 2026
என்ன HairCut பண்ணனும் தெரியலயா? APP கிட்ட கேளுங்க

உங்கள் முகத்துக்கு எந்த மாதிரியான Hairstyle எடுப்பாக இருக்கும் என தெரியவில்லையா? அந்த பிரச்னையை சரி செய்ய ஒரு செயலி இருக்கிறது. Playstore-ல் உள்ள ‘HiFace’ (அ) Hairstyle Try On ஆகிய செயலிகளின் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்து, அதில் செல்ஃபியை அப்லோடு செய்தால் போதும். முகத்திற்கு ஏற்ற Beard Style, Hairstyle, Sunglasses-ஐ அதுவே பரிந்துரைக்கும். இது சொல்வதை போல நீங்கள் Try செய்து பாருங்கள். SHARE.
News February 10, 2026
EXCLUSIVE: அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு

தமிழக பாஜக சக்தி கேந்திராவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்.14-ம் தேதி அமித்ஷா சேலம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாம். சக்தி கேந்திரா என்பது தேர்தல், கட்சிப் பணிகளை வலுப்படுத்தும் பிரிவு ஆகும். வாக்குச்சாவடிகள், பிரசாரம் உள்ளிட்ட பணிகள் இதன் கீழ்தான் வருகின்றன. சுமார் 25,000 பேர் இந்த பிரிவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


