News January 15, 2026
தி.மலை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 10, 2026
தி.மலையில் துடிதுடித்து பலி!

கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்த பாப்பாம்மாள்(86). இவர், அதிகாலை வீட்டின் அருகே உள்ள சாலையோரம் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 10, 2026
தி.மலை: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

சேத்துப்பட்டு பேரூராட்சி அண்ணா தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன், (72). இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை புருஷோத்தமன், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், அப்போது ஆரனியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த சுற்றுலா வேன், புருஷோத்தமன், சென்ற சைக்கிள் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து பலியானார்.
News February 10, 2026
தி.மலை: மகன் கண் முன்னே தாய் துடிதுடித்து பலி

சேத்துப்பட்டு, அடுத்த கிளுவாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி (55) 100 நாள் வேலைக்கு செல்வதற் காக புறப்பட்டார். அவரை மகன் மதிவாணன் மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னல் அமர்ந்திருந்த வளர்மதியின் சேலை பைக் டயரில் சிக்கிக்கொண்டதால் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.


