News January 15, 2026

புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

image

புதுச்சேரியில், மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

Similar News

News January 27, 2026

புதுவை மக்களே உஷார்.. ரூ.5.5 கோடி மோசடி!

image

புதுவை, ரெயின்போ நகரை சேர்ந்த தொழிலதிபரை, வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதனை நம்பி மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் பல்வேறு தவணைகளாக, 5 கோடியே 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்த அவர், மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2026

புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

புதுச்சேரி குருமாம்பேட் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் திலாசுப்பேட்டை, கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம், தட்டாஞ்சாவடி, கொட்டுப் பாளையம், புதுப்பேட் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து

image

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!