News January 15, 2026

துர்கா ஸ்டாலினுடன் ஜாய் கிரிசில்டா

image

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான், தன் குழந்தையின் தந்தை என்பதை நிரூபிக்க கோர்ட் படியேறி ஜாய் கிரிசில்டா போராடி வருகிறார். முன்னதாக, CM ஸ்டாலினை அப்பா என குறிப்பிட்டு, எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள் எனக் கோரியிருந்தார். இந்நிலையில் CM ஸ்டாலினிடம் இருந்து இன்று ₹100 பொங்கல் படி பெற்றதாகவும், துர்கா அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Similar News

News February 17, 2026

சட்டப்பேரவையில் காது குத்து விழா: அதிமுக

image

இடைக்கால பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பேரவை வளாகத்தில் அதிமுக நூதன போராட்டம் நடத்தி வருகிறது. இடைக்கால பட்ஜெட் காது குத்தும் விழா என விமர்சனம் செய்து அதற்கான பத்திரிகை ஒன்றையும் கையில் வைத்தபடி அதிமுக MLA-க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். குடிநீர் வரி, சொத்து வரி, மின் கட்டணம், விலைவாசி உயர்வுக்கு மொய் வைக்கலாம் என பத்திரிகையில் வாசகம் இடம் பெற்றுள்ளது.

News February 17, 2026

திமுக, தவெகவில் இணைந்த அதிமுக EX அமைச்சர்கள்

image

தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியின் முக்கிய முகங்களாக இருப்பவர்கள், இன்னொரு கட்சிக்கு தாவுவது வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், நேற்றிரவு அதிமுக <<19163275>>EX அமைச்சர் ந.சுப்பிரமணியன்<<>>, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இவர் மட்டுமின்றி, சமீப காலத்தில் பிற கட்சிகளில் தஞ்சம் புகுந்த அதிமுக Ex அமைச்சர்கள் ஏராளம். அவர்கள் யார் யார் என மேலே பட்டியலிட்டுள்ளோம். வலப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்கள்.

News February 17, 2026

இளம் நடிகை லீலா காலமானார்

image

சின்னத்திரை நடிகை ராஷ்மி லீலா(37) பெங்களூருவில் உள்ள ஹாஸ்பிடலில் காலமானார். நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஒரு மாதமாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பாப்பா பண்டு, பந்தவ்யா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனத்தை வென்ற அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த தருணத்தில் இத்துயரம் நடந்துள்ளது.

error: Content is protected !!